Category Archives: அட்டவீரட்டானம்

வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வழுவூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

மூலவர் வீரட்டேஸ்வரர், கஜசம்ஹாரமூர்த்தி, கஜாரி,
கிருத்திவாசன், ஞானசபேசன்
அம்மன் பாலகுஜாம்பிகை, இளமுலை நாயகி, இளங்கிளை நாயகி
தல விருட்சம் தேவதாரு
தீர்த்தம் பஞ்சமுக தீர்த்தம்
பழமை 2000 ஆண்டுகளுக்கு முன்
ஊர் வழுவூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

இது சோழநாட்டுத் தலம். மயிலாடுதுறை திருவாரூர்ப் பேருந்துச் சாலையில், மங்கநல்லூருக்கு முன்னால் ‘வழுவூர் பெயர்ப் பலகை’ உள்ள
இடத்தில் திரும்பி, 2 கி.மீ. சென்றால் இவ்வூரை அடையலாம். கோயில் வரை பேருந்தில் செல்லலாம். அட்ட வீரட்டத் தலங்களுள் இதுவும் ஒன்று. “வழுவூர் வீரட்டம்என்றழைக்கப்படும். இது பாடல் பெற்ற தலமன்று. இத்தலத்துக்குரிய மூர்த்தி ‘கஜசம்ஹாரமூர்த்தி’ யாவார்.


யானைஅதி உன்னதமான அறிவாற்றலுக்கும், அளவற்ற வலிமைக்கும், வீரத்துக்கும் அடையாளம். சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கம் உடையது. காட்டு விலங்கு ஆயினும் மனிதருடன் நன்கு பழகும் யானை, சில நேரம் மதம் தலைக்கேறி தன்னை வளர்த்தவனையே கொன்றும் விடுகிறது. நமது சமய வழிபாட்டில் அறிவின் சின்னமாக யானை போற்றப்படுகிறது. இறைவன், அறிவை விளக்கி நிற்கும் கோலத்தில்யானை மீது பவனி வருபவனாகக் காட்டப்படுகிறார். அவர், அறியாமையையும் அகந்தையையும் அழிப்பவராக இருக்கும்போது யானையின் தோலை உரித்துக் கொல்பவனாகக் காட்டப் படுகிறார். இதற்கு, ‘சிவபராக்ரமம்என்ற நூலில் அருமையான வரலாறு காணப்படுகிறது.