Category Archives: கணபதி ஆலயங்கள்

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், கேரளபுரம்

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், கேரளபுரம், தக்கலை அருகில், நாகர்கோவில், கன்னியாகுமரி.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

விநாயகர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கேரளபுரம்

மாவட்டம்

கன்னியாகுமரி

மாநிலம்

தமிழ்நாடு

வீரகேரளவர்மா என்ற மன்னர், இராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக இராமேஸ்வரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடியபோது, அவர் காலில் ஒரு சிறியகல் இடறியது. அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தபோது, அது பிள்ளையார் வடிவத்தில் இருப்பதைக் கண்டு வியந்தார். இராமநாதபுரம் மன்னரைச் சந்தித்த வீர கேரளவர்மா, தான் நீராடியபோது கண்டெடுத்த கல்லை அவரிடம் காட்டினான். இது பிள்ளையார் போல்தான் தெரிகிறது. நீங்கள் இதை உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். இது என் பரிசாக இருக்கட்டும் என்றார். கேரளபுரம் வந்த வீர கேரள வர்மா, தற்போது உள்ள இடத்தில் அந்தப் பிள்ளையார் உருவம் கொண்ட திருமேனியைத் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து அங்கு ஓர் அரச மரக் கன்றினையும் நட்டு வைத்துப் பராமரித்தார். நாளடைவில் அரசமரம் வளர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் சிறிய அளவிலிருந்த விநாயகரும் வளர்ந்து கொண்டே வந்தார். ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்த விநாயகர், தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாகத் திகழ்கிறார்.

அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர்

அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2746 4325, 2746 3514, +91-93811 86389 (மாற்றங்களுக்குட்பட்டவை)

கச்சபேஸ்வரர் திருக்கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மருந்தீஸ்வரர் திருக்கோயில்காலை 7 – 9 மணி வரை மட்டும். பவுர்ணமியில் முழுநேர பூஜைகள் உண்டு.

மூலவர் கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர்
உற்சவர் அமிர்த தியாகராஜர்
அம்மன் அஞ்சனாட்சியம்பாள், இருள்நீக்கியம்பாள்
தல விருட்சம் கல்லால மரம், வேர்ப்பலா
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நடனவினோதநல்லூர், ஆதிகாஞ்சி, திருக்கச்சூர், ஆலக்கோயில்
ஊர் திருக்கச்சூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

கச்சபேஸ்வரர் திருக்கோயில் :

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட, அவர் கச்சப (ஆமை) வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து, தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே இத்தலத்து சிவனுக்கு, “கச்சபேஸ்வரர்என்ற பெயரும், தலத்திற்கு திருக்கச்சூர்என்ற பெயரும் ஏற்பட்டது.

கச்சபேஸ்வரர்திருக்கோயில் அம்பாள் அஞ்சனாட்சி தெற்கு நோக்கியபடி தனிச்சன்னதியில் அருளுகிறாள். “அஞ்சனம்என்றால் கண்என்று பொருள். இவள் மக்களை தன் கண்போல காப்பதால் இப்பெயர் பெற்றாளாம். அழகு மிகுந்தவளாக இருப்பதால் இவளுக்கு சுந்தரவல்லி என்றொரு பெயரும் உண்டு. இவளது சன்னதிக்கு முன் உள்ள மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் உள்ளது. இங்கு பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பம் சிறப்பதாக நம்பிக்கை.

விஷ்ணுவுக்கு அருள் செய்த சிவன் அவருக்காக இத்தலத்தில், தியாகராஜராக,”அஜபா நடனம்ஆடிக் காட்டியுள்ளார். எனவே, இத்தலம் உபயவிட தலங்களில்ஒன்றாகக் கருதப்படுகிறது. உற்சவராக ஒரு சிறு தொட்டிக்குள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் தியாகராஜருக்கே திருவிழாக்கள் நடப்பதும், அவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுவதும் சிறப்பு.