Category Archives: ஐயப்பன்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், கோபி
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், கோபி, ஈரோடு மாவட்டம்.
+91-4285-321854, 94427 09596
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐயப்பன் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கோபி | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கோபி ஐயப்பன் கோயிலில் ஈஸ்வரனும், முருகனும் எதிரெதிரே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கிருக்கும் மஞ்சள் மாதா சன்னதி பிரபலமானது. இந்த கோயிலில் வாய் பேச முடியாதவர்களுக்காக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, அவர்கள் நலனுக்காக வேண்டப்படுகிறது. கோயிலினுள் நுழைந்ததும் இடது, வலது பக்கங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இரு சன்னதிகள் அமைந்துள்ளன. இதனையடுத்து ஐயப்பசுவாமி மண்டபம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுமார் மூன்றாயிரம் பக்தர்களுக்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு வழிநடத்தி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இருமுடிகட்டும் மண்டபத்திற்கு அருகே நாகராஜர் சன்னதியும், கோயிலின் மையப்பகுதியில் ஐயப்பன் சன்னதியும், அதனருகே விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத பரமேஸ்வரர் சன்னதியும், இதற்கு நேர் எதிரே பாலமுருகன் சன்னதியும், அருகில் நவக்கிரகங்களும் அமைந்துள்ளன. பரமேஸ்வரர் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் பாலமுருகன் ஈஸ்வரனின் நேரடி அருளை பெற்று பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை வழங்கி வருகிறார்.
அருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா
அருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா, மஞ்ஜப்புரா காலடி, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.
+91- 484 – 228 4167 (மாற்றங்களுக்குட்பட்டது)
தினமும் இக்கோயில் திறக்கப்படாது. சபரிமலையில் நடை திறக்கும் மாதபூஜை உள்ளிட்ட நாட்களில் மட்டும், காலை 5 – 1 மணி, மாலை 5 – 8 மணி வரை நடை திறந்திருக்கும். பங்குனி உத்திரத்தன்று நடை திறக்கப்பட்டிருக்கும். பெண்களுக்கும் அனுமதி உண்டு.
மூலவர் | – | ஐயப்பனாக கருதி வழிபடப்படும் வெள்ளி தடி, விபூதி பை, கல் | |
தீர்த்தம் | – | பூர்ணாநதி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மஞ்ஜப்புரா, காலடி | |
மாவட்டம் | – | எர்ணாகுளம் | |
மாநிலம் | – | கேரளா |
ஐயப்பனின் தந்தையான பந்தளராஜாவுக்கு உதயணன் என்ற திருடனால் தொந்தரவு இருந்தது. உதயணன் மக்களிடம் கொள்ளையடித்து வந்தான். இதனால் பந்தள மகாராஜா தன் மகன் ஐயப்பனிடம் இதுபற்றி சொன்னார். ஐயப்பன் உதயணனை அழிக்கச்சென்ற போது, அம்பலப்புழா மற்றும் ஆலங்காட்டு ராஜாக்கள் தங்கள் படையுடன் அவருக்கு உதவியாக சென்றனர். அன்றுமுதல் இந்தக் குடும்பங்கள் ஐயப்பனின் நெருங்கிய நண்பர் களாயினர். இதன் பிறகு ஐயப்பன், மகிஷியை அழிக்க பூமிக்கு வந்த தன் கடமை முடிந்து விட்டதால், சபரிமலைக்குப் புறப்பட்டார். தான் செல்லும் முன் எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைக்கும்படி அம்பலப்புழா மற்றும் அம்பாடத்து மாளிகா குடும்பத்தினரிடம் விளக்கினார். உடனே அம்பலப்புழா குடும்பத்தினரும், ஐயப்பனின் நண்பரான வாபரும் எருமேலி வழியாக சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைத்தனர். இதுவே “பெரிய பாதை” எனப்படுகிறது. இதன்பிறகு, ஐயப்பனும், அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் சபரிமலை சென்றனர். அங்கு பரசுராமர் ஸ்தாபித்த சாஸ்தா சிலையில், ஐயப்பன் ஜோதி சொரூபமாக ஐக்கியமாகி விட்டார்.