Category Archives: ஐயனார்
அருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோயில், கோச்சடை
அருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோயில், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடை, மதுரை மாவட்டம்.
+91 452 6524201 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அய்யனார் | |
தல விருட்சம் | – | புளியமரம் | |
தீர்த்தம் | – | வைகை, அழகர் கோவில் தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கோச்சடை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவனின் 64 திருவிளையாடல்களில் கோச்சடை பற்றி சொல்லப்பட்டுள்ளது. தன் பக்தையான வந்தி என்னும் முதியவளைச் சிவலோகத்திற்கு சேர்க்க திருவுள்ளம் கொண்டு வைகை நதியை சிவன் பெருகச் செய்தார். உடனே நகரில் உள்ளவர்கள் உடைந்த கரையை அடைக்க ஆரம்பித்தனர். பிட்டு விற்று உண்பவளும், பிட்டையே சிவனுக்கு நைவேத்யமாக படைப்பவளுமான வந்திக்காக சிவனே கூலியாளாக மண்கூடையை சுமந்து கொண்டு கரையை அடைக்காமல் இருந்தார். இதனால் பாண்டிய மன்னன் சிவனை கோவிச்சு அடித்ததால் “கோவிச்சடி” என்ற பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் “கோச்சடை” என்று பெயர் திரிந்தது. கோச்சடைக்கு மிக அருகில் சொக்கநாதர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு தான் அன்னை மீனாட்சி முதன் முதலில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் உள்ளே நுழைந்ததும் முத்தையாவும், வில்லாயுதம் உடைய அய்யனாரும் குதிரை மீது அமர்ந்த படி பஞ்சபூதங்களுடன் நம்மை வர வேற்கிறார்கள். அவர்களை தரிசித்து அப்படியே நேராக சென்றால் இந்திரன் அய்யனாருக்கு அளித்த வெள்ளை யானை உள்ளது. அதையும் தாண்டிச் சென்றால் மூலஸ்தானத்தில் மூலவராக கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வில்லாயுதம் உடைய அய்யனார், பூரணை, புஷ்கலை சமேதராக கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தின் முன்பு செண்பகப்பாண்டியன் காலத்தில் செண்பகத்தோட்டத்தில் கிடைத்த செண்பகவல்லி அய்யனார், பூரண, புஷ்கலையுடன் அமர்ந்திருக்கிறார். இவருக்கு வெள்ளை யானை தவிர குதிரையும் ரிஷபமும் வாகனங்களாக உள்ளன. இது பாண்டியர் கால புராதனக் கோயிலாகும். அய்யனார் மதுரை எல்லையின் காவல் தெய்வம். இங்கு திருமலை நாயக்கரால் இரண்டு குதிரையும், ஒரு பூதமும் முதலில் கட்டப்பட்டது.
அருள்மிகு அய்யனார் திருக்கோயில், வாடிப்பட்டி
அருள்மிகு அய்யனார் திருக்கோயில், வாடிப்பட்டி, மதுரை மாவட்டம்.
காலை 6-8 மணி, மாலை 4-7 மணி வரை திறந்திருக்கும்.
சாஸ்தாவின் அவதாரம் என்று கூறப்படும் அய்யனார், வாடிப்பட்டியில் அருள் செய்கிறார். இவர் முதலில் காட்சி தந்தது கவுசிக வம்சத்தை சேர்ந்த பிருத்யும்ய ராஜாவுக்குத்தான்.
ஒருமுறை இவர் வேட்டைக்கு சென்றபோது தாகத்திற்கு நீர் கிடைக்கவில்லை. “ஊனான்” எனப்படும் கொடியை வெட்டினால் தண்ணீர் கிடைக்கும் என்பதால் அதை வெட்டினார். பலமுறை முயற்சித்தும் கொடி அறுபடவில்லை. கொடி எங்கிருந்து முளைத்து வருகிறது என அறிவதற்காக அதைத் தொடர்ந்து சென்றபோது, ஒரு இலிங்கத்தின் அடிப்புறத்தில் இருந்து வெளிவந்தது தெரியவந்தது. கொடியைப் பலம் கொண்டமட்டும் இழுக்க, கொடி வேரோடு வெளி வந்தது. வேரில் பாதுகை (செருப்பு) செண்டி மற்றும் பிரம்பு இருந்தது. ராஜா திகைத்தார். அப்போது ஜடா முடியுடன் அய்யனார், ராஜா முன் காட்சி அளித்தார்.