Category Archives: அநுமன்
அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல்
அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்.
+91-99767 90768 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் காலை 11 மணி வரையும், இரவில் 9 மணி வரையும் திறந்திருக்கும்.
மூலவர் | – | அபயவரத ஆஞ்சநேயர் | |
தல விருட்சம் | – | பலா | |
தீர்த்தம் | அனுமன் தீர்த்தம் | ||
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திண்டுக்கல் | |
மாவட்டம் | – | திண்டுக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இப்பகுதியை ஆண்ட ஆஞ்சநேய பக்தரான சிற்றரசர், போருக்குச் செல்லும்போது, ஆஞ்சநேயரை வழிபட்டே செல்வார். அவருக்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. ஆனால், எங்கு கோயில் கட்டுவதென அவருக்குத் தெரியவில்லை. மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சயநேர், அப்பகுதியில் இருந்த மலைக் கோட்டையை சுட்டிக்காட்டினார். மன்னர் ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, கோட்டையில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்தார். இவர், “அபய வரத ஆஞ்சநேயர்” எனப் பெயர் பெற்றார்.
திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்த கோயில் இது. கோயிலுக்கு கீழே அனுமன் தீர்த்தம் உள்ளது.
பெருமாள், இராமாவதாரம் எடுத்தபோது, சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்ததாகச் சொல்வர். இதை உணர்த்தும்விதமாக இக்கோயிலில், ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு சிவ அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். சிவ வடிவமான தட்சிணாமூர்த்திக்கு வியாழன் உகந்தது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.