அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், ராமேஸ்வரம்
அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், ராமேஸ்வரம்– 623 526, ராமநாதபுரம் மாவட்டம்
மூலவர் | – | சுக்ரீவர் |
தீர்த்தம் | – | சுக்ரீவர் தீர்த்தம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | ராமேஸ்வரம் |
மாவட்டம் | – | ராமநாதபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். சுக்ரீவன், ராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான். பின்பு சுக்ரீவனுக்காக ராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். இவ்வாறு வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது.
தோஷம் நீங்க இவ்விடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். சுக்ரீவன் வழிபட்ட தலத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
சுக்ரீவன் சன்னதியுடன் மட்டும் அமைந்த, மிகச்சிறிய கோயில் இது. கோயிலுக்கு வெளியில் சுக்ரீவர் உண்டாக்கிய தீர்த்தமும், எதிரே வங்காள விரிகுடா கடலும் இருக்கிறது.
இக்கோயிலில் இரும்பு கம்பிக்கதவு போடப்பட்டிருப்பதால் வெளியில் இருந்தே சுவாமியை தரிசிக்கலாம். இது ஒரு தோஷ நிவர்த்தி தலம்.
திருவிழா:
ராமநவமி, வைகுண்ட ஏகாதசி
பிரார்த்தனை:
செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றவர்கள் இங்கு வேண்டி மனஅமைதி பெறுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
வழிகாட்டி:
ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் ராமர் பாதம் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் : ராமேஸ்வரம்
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
தங்கும் வசதி : ராமேஸ்வரம்
Leave a Reply