அருள்மிகு திருஊரகப்பெருமாள் திருக்கோயில், குன்றத்தூர்
அருள்மிகு திருஊரகப்பெருமாள் திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2478 0436, 98401 58781 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
திருஊரகப்பெருமாள் |
தாயார் |
– |
|
திருவிருந்தவல்லி |
ஆகமம் |
– |
|
வைகானசம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
குன்றத்தூர் |
மாவட்டம் |
– |
|
காஞ்சிபுரம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
முற்காலத்தில் குலோத்துங்க சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். ஒருசமயம் அவனுக்கு தோஷம் உண்டானது. பல தலங்களில் பரிகாரம் செய்தும் பலனில்லை. ஒருநாள் திருமால் அவனது கனவில் முதியவர் வடிவில் தோன்றி, தான் காஞ்சிபுரத்தில் திருஊரகப்பெருமாளாக அருளுவதாகவும், தன்னை அவ்விடத்தில் வந்து வழிபட தோஷ நிவர்த்தி பெறும் என்றும் கூறினார். அதன்படி மன்னன் காஞ்சிபுரம் சென்று, திருஊரகம் அடைந்தான். அங்கு, பெருமாள் ஆதிசேஷன் வடிவில் இருந்ததைக் கண்டான். அதுவரையில் பெருமாளை, முழு உருவத்துடன் பார்த்திருந்த மன்னனுக்கு தான் சரியான கோயிலுக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே அன்றிரவில் அங்கேயே தங்கினான். அன்றும் அவனது கனவில் தோன்றிய பெருமாள், தானே அத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் எழுந்தருளியிருப்பதாக உணர்த்தினார். அதன்பின் ஊரகப் பெருமாளை தரிசித்த மன்னன், தோஷம் நீங்கப்பெற்றான். பின்பு பெருமாளுக்கு நன்றிக்கடனாக இத்தலத்தில் ஒரு கோயில் கட்டினான். அப்போது பெருமாள் அவனுக்கு, திருப்பதி வெங்கடாஜலபதி அமைப்பில் காட்சி கொடுத்தார். எனவே அதே அமைப்பிலேயே இங்கு பெருமாளுக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு,”திருஊரகப்பெருமாள்” என்று பெயர் சூட்டினான்.
இத்தலத்திலிருந்து மேற்கு திசையில் காஞ்சிபுரம் இருக்கிறது. எனவே மன்னன் இக்கோயிலைக் கட்டியபோது, காஞ்சி திருஊரகத்தை பார்க்கும் விதமாக, இத்தலத்தை மேற்கு நோக்கி கட்டினான். தாயார் திருவிருந்தவல்லி கிழக்கு நோக்கிய சன்னதியில் தனியே இருக்கிறாள். வைகுண்ட ஏகாதசி விழா ஒரு நாள் மட்டும் நடக்கிறது. அன்று சுவாமி சொர்க்கவாசல் செல்கிறார். புரட்டாசி 4வது சனிக்கிழமையில் பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது விசேஷம். பங்குனி ரோகிணி நட்சத்திரத்தில் சுவாமி, தாயார் திருக்கல்யாணம் நடக்கிறது.
பிரகாரத்தில் சீதை, இலட்சுமணருடன் கூடிய கல்யாணராமர் சன்னதியும், எதிரில் வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கிறது. இவருக்கு வெண்ணெய்க்காப்பு செய்து வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்டாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். மூலஸ்தானத்தில் பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிரக மற்றும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இங்கு சுவாமி, தாயாருக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
திருவிழா:
ஆடிப்பூரம், நவராத்திரி, அனுமன் ஜெயந்தி.
கோரிக்கைகள்:
கிரக மற்றும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, தாயாருக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
Leave a Reply