அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், அமிர்தபுரி
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், அமிர்தபுரி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 4115- 265 237 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
அமிர்தபுரி |
மாவட்டம் |
– |
|
காஞ்சிபுரம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
எந்த ஒரு செயலையும் இடையூறுகள் எதுவுமில்லாமல் நிறைவேற்றுவதில் விநாயகருக்கு நிகர் யாருமில்லை. விக்னமில்லாமல் முடிப்பதால்தான் அவர் விக்னேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்து விநாயகர் நவக்கிரகங்களுக்கு அதிபதியாக விளங்குகிறார். இவர் தனது குருவான சூரியனை நெற்றியிலும், குளுமை பொருந்திய சந்திரனை வயிற்றிலும், பூமிக்கு அதிபதியாக விளங்கும் செவ்வாயை வலது தொடையிலும், மகாவிஷ்ணுவின் அம்சமான புதனை வலது கீழ்கையிலும், உலகத்திற்கே குருவாக விளங்கும் வியாழனைத் தலையிலும், அசுர குரு சுக்கிரனை இடது கீழ் கையிலும், தெற்கு பார்த்த காகத்துடன் கூடிய பொங்கு சனியை வலது மேல் கையிலும், இராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது காலிலும் கொண்டு அருள்பாலிக்கிறார். பொதுவாக சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மர் அருள்பாவிப்பார். ஆனால் இத்தலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விநாயகரின் முதுகில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் என்ற பஞ்ச விகாரங்களை அடக்கினால் யோகம் கிடைக்கும் என்பதற்கிணங்க இங்கு ஐந்து தலைநாகரின் மீது மேற்கு பார்த்த நிலையில் யோக நரசிம்மர் உள்ளார். நோய் தீர்ப்பதற்கு சஞ்சீவி மலையை வலது கையிலும், எதிரியை வெல்வதற்கு கதையை இடது கையிலும், காரிய வெற்றிக்கு வாலில் மணியுடன், கூப்பிட்டவுடன் ஓடிவருவதற்கு, காலை முன்வைத்து தயார் நிலையில் அனுமன் அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயருக்கு பின்புறம் கருடன். இவர் வலது மேல் கையில் அமிர்த கலசமும், இடது மேல்கையில் வாசுகி பாம்பும், வேதத்தை கையில் பிடித்து கும்பிட்ட நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை சுற்றி நவநாகர்கள் இருப்பதால், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவருக்கு பால் அபிஷேகம் செய்து பலனடையலாம்.
அப்படி பால் அபிஷேகம் செய்யும் போது, இவரது இடது கையில் உள்ள வாசுகியின் மீது பால் பட்டு வழியும் போது நீலவண்ணத்தில் வழிவது அதிசயமாகும். இக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் நவகிரக விநாயகர், அவரது முதுகில் யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்கள். இங்க வந்து வழிபட்டால் நலமும், யோகமும் ஒன்றாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசித்தால், துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளையாரை நாம் நின்று தரிசிக்கும் இடமே இராசி மண்டலத்தில் தான். எனவே நாம் எந்த இராசிக்காரர்களாக இருந்தாலும், பிறந்த நேரம், நட்சத்திரம் சரியாக தெரியாவிட்டாலும் அனைவருக்கும் அருளை அள்ளித்தருவார். கல்வி, செல்வம், வீரம் என அனைத்தையும் அருளும் வள்ளலாக, தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக பிரசன்ன வேங்கடேசப் பெருமாளாக விளங்குகிறார். இத்தலத்து விநாயகர் நவக்கிரகங்களுக்கு அதிபதியாக நவக்கிரகங்களை தன்னுள் அடக்கியபடி அருள்பாலிக்கிறார். இவரது முதுகில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஐந்து தலைநாகரின் மீது மேற்கு பார்த்த நிலையில் யோக நரசிம்மர் உள்ளார்.
திருவிழா:
திருவோண நட்சத்திரம், வைகுண்ட ஏகாதசி.
கோரிக்கைகள்:
நாகதோஷம் உள்ளவர்கள், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர், வறுமையில் வாடுபவர்கள், கோர்ட் வழக்குகளில் நியாயமான வெற்றி வேண்டுபவர்கள், கல்வியறிவில் மேன்மையடைய விரும்புபவர்கள், எந்த செயலையும் தைரியத்துடன் செயலாக்க விரும்புவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும்.
நேர்த்திக்கடன்:
பெருமாளை திருவோண நட்சத்திரத்தில் வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். நவக்கிரக விநாயகரை பூஜித்தால் சகல செல்வங்களும் கிடைக்கும் என விருத்தாசல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இவரை தரிசித்தால் கிரக தோஷங்கள் நீங்குவதுடன் எடுத்த காரியங்கள் எதுவாக இருந்தாலும் வெற்றிக்கரமாக முடிவடையும்.
Leave a Reply