அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், கருங்கல்பாளையம்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், கருங்கல்பாளையம், ஈரோடு மாவட்டம்.

+91-424 – 221 28 16 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கோதண்டராமர்

தாயார்

சீதா பிராட்டி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கருங்கல்பாளையம்

மாவட்டம்

ஈரோடு

மாநிலம்

தமிழ்நாடு

திருமணம், சமூக மற்றும் மத வழிபாடு கூட்டங்கள் நடத்த ஏதுவாக 1974ம் ஆண்டில் ஈரோடு ரங்கபவனம் டிரஸ்ட் சார்பில் சமுதாயக் கூடம் ஒன்று நிறுவப்பட்டது. இங்கு சித்தி விநாயகர் கோயிலும், நவக்கிரகங்கள் சன்னதியும் கட்டப்பட்டன. கும்பாபிஷேகத்தை காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நடத்தி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் ஸ்ரீகோதண்டராமர், சீதா பிராட்டி, இலட்சுமணர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் மகாஸம்ப்ரோஷணம் அஹோபில மடத்தின் 44ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமியால் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தன்று கோதண்டராம சுவாமிக்கும், சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கும், மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும், சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கும் கூட்டு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.

காலை 7.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8 மணிக்கு தரிசன நேரம், 9.30 மணிக்கு காலை பூஜை, 10.30 மணிக்கு தரிசன பூஜை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தரிசன பூஜை, 6 மணிக்கு இரவு பூஜை, இரவு 7 மணிக்கு தரிசன பூஜைகள் நடக்கிறது.

சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர்.

தமிழகத்தில் இராமருக்குரிய முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று.

திருவிழா:

இராம நவமி உற்சவம், சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம், விநாயகர் சதுர்த்தி ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக நடந்து வருகின்றன.

கோரிக்கைகள்:

வெள்ளிக்கிழமைகளில் ராமபிரான், சீதா தேவிக்கு நெய்தீபம் ஏற்றி, 12 கோயில் பிரகாரத்தை வலம் வந்து அர்ச்சனை செய்தால் சகல நன்மைகள் உண்டாகும். மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பதும், 16 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாருக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 16 முறை பிரகாரம் வலம் வந்தால் மனோவியாதி, தொழில் தடங்கல் ஆகியவை நீங்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, 16 முறை சுற்றி வந்து அர்ச்சனை செய்தால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள். வியாழக் கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் லோகநரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து 16 முறை சுற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கி, சகல காரிய சித்தி ஏற் படும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வாரை 12 முறை சுற்றி அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள் நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமானுஜருக்கு நெய் தீபம் ஏற்றி, 12 முறை சுற்றி வந்தால் சரும நோய் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

கோதண்டராமருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *