அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர்
அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர், கோயம்புத்தூர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
உத்தண்ட வேலாயுத சுவாமி |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
ஊதியூர் |
|
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த சிறிய குகை உள்ளது. சிவனைக் கண்டு வணங்கியவர் இவர்; மேற்கே உள்ள ஊதியூர் மலையில் தவம் செய்த அவர், ஊதி, ஊதி பொன் தயாரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. மட்டமான உலோகங்களுடன் பச்சிலைச்சாற்றினைச் சேர்த்து கொங்கணர் செம்பொன் செய்ததாகக் கூறப்படுகிறது. மலையின் வடபுறம், கொங்கண சித்தர் பொன் ஊதியதற்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் கிடைக்கின்றன. கொங்கணச் சித்தர் வாழ்வுடனும் வரலாற்றுடனும் தொடர்புப்படுத்திக் கூறப்படுவதால், ஊதியூர் மலை, கொங்கணகிரி எனவும் அழைக்கப்படுகிறது.
ராம லக்ஷ்மணனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது, அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை “சஞ்சீவி மலை” என்றும் “ஊதியூர் மலை” என்றும் அழைக்கப்படுகிறது. மலையில் உத்தண்ட வேலாயுத சுவாமி எழுந்தருளியுள்ளார். மலையின் இடைப்பகுதியில் முருகன் கோவில் உள்ளது. மலைப்பகுதியின் தொடக்கத்தில் மிகவும் அழகிய மயில் மண்டபம் உள்ளது. அடுத்து இருப்பது பாதவிநாயகர் கோவில், வழியில் வடபுறம் இடும்பன் கோயிலும், தென்புறம் அனுமந்தராயன் கோயிலும் உள்ளன. கடந்து மேலே சென்றால் நுழைவாயிலோடு கூடிய ஒரு மண்டபம் இருக்கிறது. அதைக் குறட்டு வாசல் என்பர். சித்தர்கள் வாழ்ந்த இம்மலைமீது விளங்கும் இறைவனை தரிசித்தவர், வாழ்வில் தரித்ததிரங்கள் நீங்கி வளம் பெறுவர் என்பது ஐதீகம்.
மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் மயில்வாகன முருகன், காமதேனு, அடியவர், இடும்பன், மார்க்கண்டேயர், திருமால், ஐயனார், சூரியன், வேலாயுதர், பூதம், விநாயகர், இராம லட்சுமணர் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மகா மண்டபம் மற்றும் வாத்ய மண்டபத்தில் சுந்தரர், முதலையிடமிருந்து பிள்ளையை மீட்ட காட்சி சிற்பமாகத் தீட்டப்பட்டுள்ளது. இங்கு பைவரவருக்கு தனிச் சன்னதியுள்ளது. மலையின் வடபுறம்,
திருவிழா:
பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம்.
வேண்டுகோள்:
வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்குள்ள வேலாயுதசுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள சுவாமிக்கு பாலபிஷேகம், தேனபிஷேகம் செய்தும், புத்தாடை சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply