அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோபி
அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோபி, ஈரோடு மாவட்டம்.
+91-4285-222 125 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
பால தண்டாயுதபாணி |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கோபி | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஆதார மூலக்கோயிலின் கால அளவை நிர்ணய படுத்த முடியாத அளவிற்கு ஆண்டவர் மலை முருகன் கோயில் பழமை வாய்ந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்குன்றில் குடிகொண்ட முருக பெருமானைப் போற்றி வணங்கி பூசாரி சித்தர் என்பவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு கொடுத்து வந்தார். அதன் பின்னர் குப்பணசித்தர் என்பவர் காற்று ஆதாரத்துடன் பல காலங்கள் அருள் பாலித்து வந்தார். கடந்த 1980ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டது. தொடர்ந்து பத்து வருடங்களாக கோயில் திருப்பணிகள் நடந்து 1990ம் வருடம் நிறைவு பெற்றது. ஆண்டாண்டு காலங்களாக ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புதத் தலமாக கோபிசெட்டிபாளையம் ஆண்டவர் மலை முருகன் கோயில் திகழ்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் கோபியில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோபியில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது. பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார்.
கோயில் பிரகாரத்தில் விநாயகப் பெருமான், சிவன், சக்தி, வள்ளி–தேவசேனா, மகாவிஷ்ணு, ஆதித்ய நவகிரகம், சனீஸ்வரர் ஆகிய மூர்த்திகள் இடம்பெற்றுள்ளனர்.
திருவிழா:
அமாவாசை, மாதக் கிருத்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி, உத்திரம் ஆகிய சிறப்புமிக்க திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தினமும் மூன்று கால பூஜைகள் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு செய்யப்படுகிறது.
வேண்டுகோள்:
நோயுற்றவர்கள் கோயில் மண்டபத்தில் தங்கி, தரிசித்து வழிபாடு செய்கின்றனர். இதன்மூலம் குணம் பெற்றுச் செல்பவர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி நலம்பெறுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply