அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காந்தமலை, மோகனூர்

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காந்தமலை, மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

+91-4286 – 645 753, +91- 98424 41633

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாலசுப்பிரமணியர் (பழநியாண்டவர்)

உற்சவர்

கல்யாண சுப்பிரமணியர்

தீர்த்தம்

கிணற்று தீர்த்தம்

ஆகமம்

சிவாகமம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

மோகனூர்

மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

நாரதர் கொடுத்த கனியை தனக்குத் தராததால் கோபம் கொண்ட முருகன், கைலாயத்திலிருந்து தென்திசை நோக்கி வந்தார். சிவனும், பார்வதியும் அவரை சமாதானம் செய்தும் கேட்கவில்லை.

அவரைப் பின்தொடர்ந்த அம்பிகை, “மகனே நில்என்று அழைத்தார். தாயின் சொல் கேட்ட முருகன், நின்றார். அவரிடம் பார்வதி, கைலாயத்திற்குத் திரும்பும்படி அழைத்தாள். ஆனால், முருகன் கேட்கவில்லை. தான் தனித்து இருக்க விரும்பியதாகக் கூறிய அவர் பழநிக்குச் சென்று குடிகொண்டார். இவ்வாறு முருகனை அம்பாள் அழைத்தபோது, இத்தலத்தில் நின்றதாக தல வரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. இவர் பாலகனாக, “பால சுப்பிரமணியர்என்ற பெயரில் அருளுகிறார்.

பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார். இக்கோயிலுக்குச் செல்ல 39 படிகள் இருக்கிறது. 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளே இந்த படிக்கட்டுகளாக இருப்பதாக சொல்கிறார்கள். ஜாதகத்தில் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது.

கோயிலுக்கு வெளியே சிறிய குன்று ஒன்றுள்ளது. இதன் மேல் இடும்பன் சன்னதி உள்ளது. இவர் தோளில் காவடி தூக்கியபடி, தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இங்குள்ள வல்லப விநாயகர் மிக விசேஷமானவர். இவர் 10 கைகளுடன் அருளுகிறார். கோயில் முன்மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார். ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் இவருக்கு ஜெயந்திவிழாவெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. கால பைரவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தேய்பிறை அஷ்டமியின்போது இவருக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற ஊர் என்பதால் மகனூர்என்றழைக்கப்பட்ட இத்தலம், “மோகனூர்என்று மருவியதாக சொல்கிறார்கள். இத்தலவிநாயகர் அரச விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் உள்ள சிவதுர்க்கை எட்டு கரங்களுடன், மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருவது விசேஷம். நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் வாகனத்துடன், நின்ற கோலத்தில் இருக்கின்றன. விஸ்வநாதர், விசாலாட்சி, முருகனின் படைத்தளபதியான வீரபாகு, சூரியன், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர்.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.

சித்ரா பவுர்ணமியன்று படிபூஜை மற்றும் மாத கிருத்திகை, சஷ்டியில் விசேஷ பூஜை நடக்கிறது.

வேண்டுகோள்:

இத்தலத்து முருகனிடம் வேண்டிக்கொண்டால் அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் இவருக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *