அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர்

அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர், (திருப்பேரையூர்) நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4367 – 237 692 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஜகதீஸ்வரர்
அம்மன் ஜகன் நாயகி (பெண்ணமிர்த நாயகி)
தல விருட்சம் நாரத்தை மரம்
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பேரெயில், ஓகைப்பேரெயில்
ஊர் ஓகைப்பேரையூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் அப்பர்

சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது, அதைச்சார்ந்த கோட்டை இருந்தது என்றும், அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் பேரெயிலூர்என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி பேரையூர்என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து.

இவ்வூரில் தோன்றிய பெண் புலவர், பேரெயில் முறுவலார் பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன.

இத்தலத்தில் உள்ள சபாபதி (நடராஜர்) பிற தலங்களை விட மிக அழகாக விளங்குவதாக தல வரலாறு கூறுகிறது.

இத்தல முருகப்பெருமானுக்கு சித்திரை சஷ்டியில் திருவிழா நடக்கிறது. திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகை திருப்பதிகம் ஒன்றைப்பெற்ற தலம்.

3 நிலை ராஜ கோபுரம். ஒரு பிரகாரத்துடன் கிழக்கு நோக்கிய கோயில். உள்பிரகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன், துர்க்கை, இலிங்கோத்பவர் ஆகிய சன்னதிகள் உள்ளன.

இத்தலத்தினை சுற்றிலும் தென்கிழக்கே தலையாலங்காடு, வடமேற்கே திருநாட்டியத்தான்குடி, தென்மேற்கே திருவாரூர், வடகிழக்கே திருவெண்டுதுறை ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன.

தேவாரப்பதிகம்:

மறையும் ஓதுவார் மான்மறிக் கையினர் கறைகொள் கண்ட முடைய கபாலியார் துறையும் போகுவர் தூயவெண் நீற்றினர் பறையும் சூடுவர் பேரெயி லாளரே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரித்தென்கரை திருத்தலத்தில் இது 114வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *