திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை

அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை, திருவரத்துறை, கடலூர் மாவட்டம்.

+91-4143-246 467

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர்
அம்மன் திரிபுர சுந்தரி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை, வட வெள்ளாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை
ஊர் திருவட்டத்துறை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள்

வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம்.

இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி நீவாஎன்று அழைத்ததாக ஐதீகம். இதுவே நீவாவடவெள்ளாறுநதியாக மாறியது என்றும் கூறுவர்.

இது கோயிலுக்கு தெற்கில் அமைந்துள்ளது. வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்தபோது அதனால் சேதம் உண்டாகாதிருக்க, நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தர் பெண்ணாடகம் பிரளயகாலேஸ்வரரை தரிசித்து விட்டு, இத்தலம் வர விரும்பி வழியில் உள்ள மாறன்பாடி தலத்தில் தங்கினார். சம்பந்தர் வரும் வழியில் ஏற்பட்ட வருத்தத்தை கண்ட சிவன், அவருக்கு, செல்ல முத்துச்சிவிகையும், முத்துகொண்டையையும் தந்தருளினார். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு கோயில் கர்ப்பகிகத்திற்கு இடப்புறம் மகம் வாசல்என்ற வாசல் உள்ளது.

கணவனை இழந்த பெண்கள் ஒரு வருடம் ஆன பிறகு அருகில் உள்ள ஆற்றில் குளித்து விட்டு மகம் வாசல் வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு அதன் வழியே சென்றுவிடுவர். மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோர் வழிபட்டதலம்.

தேவாரப்பதிகம்:

பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர் மின்னொப் பானைவிண் ணோரும் அறிகிலார் அன்னொப் பானை யரத்துறை மேவிய தன்னொப் பானைக் கண்டீர்நான் தொழுவதே

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.

கோரிக்கைகள்:

வேண்டுதலில் நியாயமானவற்றை எல்லாம் கொடுத்தருளும் இறைவன்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *