மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுந்தரேஸ்வரர் | |
உற்சவர் | – | சேக்கிழார் | |
அம்மன் | – | மீனாட்சி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | தேவகோட்டை | |
மாவட்டம் | – | சிவகங்கை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவபக்தர்களுக்கு பெரிய புராணம் என்றால் உயிர். நாயன்மார்களின் வர லாற்றை விளக்கும் அற்புத நூல் இது. சேக்கிழார் சுவாமிகள் இதை இயற்றினார். அந்தப் பெருமானுக்கு கோயில் அமைக்க முயன்றார் வன்தொண்டர் என்ற புலவர். சிவவழிபாட்டின் முக்கிய நோக்கமே அடியார்களுக்கு தொண்டு செய்வதுதான். இங்கே சிவனடியாரான சேக்கிழாருக்கு, இன்னொரு தொண்டரான வன்தொண்டர் கோயிலே எழுப்ப முயற்சித்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் அது சிவன் கோயி லாயிற்று. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அங்கே, சேக்கிழாரை உற்சவமூர்த்தியாக்கினார். அதில் சேக்கிழாருக்குத் தனியாக சன்னதி எழுப்பினார். இந்த கோயிலில் ஒலிப்பதற்காக, பெரிய மணி ஒன்றை வன்தொண்டர் நிறுவினார். அதில், “சேக்கிழார் கோயில் மணி” என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இரு ராஜ கோபுரங்களிலும் மீனாட்சியும், சுந்தரரேஸ்வரரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர். கோயிலின் உட்பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், மரகத விநாயகர், விசுவநாத விசாலாட்சி, பாலதண்டாயுதபாணி, சுப்ரமணியர், மகாலட்சுமி, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை, சண்டேசுவரர், சண்டேசுவரி, நடராஜர், நவகிரகங்கள், கன்னிமூலை கணபதி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் “சேக்கிழார் கோயில்” என்றே அழைக்கப்படுகிறது.
திருவிழா:
வைகாசி பூச நட்சத்திரத்தன்று சேக்கிழார் குரு பூஜையும் அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. அன்று வெள்ளியானையின் மீது வலம் வருகிறார். சித்திரை திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இதில் சம்பந்தருக்கு அம்பிகை பால் கொடுக்கும் உற்சவம் சிறப்பானது.
வேண்டுகோள்:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply