புவன ஈசுவரி கோயில்-ஐயப்பன் நகர்
உலக நாயகியான புவன ஈசுவரி பல இடங்களில் கோயில் கொண்டு அருள் பாலித்துக் கொண்டுள்ளாள்.
திருச்சி மத்திய பேருந்து நிலயத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வழியில் 5 கல் தொலைவில் உள்ள அய்யப்பன் நகரில் உள்ளது இந்த திருத்தலம்.
நான்கு புறமும் சுற்று மதில். தென் புறத்தே வாயில் (வாய்+இல்). உள்ளே நுழைந்து இடது புறம் திரும்பிய பின் அன்னை காட்சி தருகிறாள்.
அருள் பொழியும் சாந்தமான முகத்துடன் அம்மை அமர்ந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாம். ஒரு கரத்தில் பாசம்; இன்னொரு கரத்தில் அங்குசம்; மற்றுமிரு கரங்களிலும் வரதம், அபயம் அளித்தபடி வண்ணக் கோலத்தில் அமர்ந்துள்ளாள் அன்னை.
கருவறையின் வெளியே இடதுபுறம் அட்டசக்தி வினாயகரும், வலது புறம் பாலமுருகனும் வீற்றிருக்கின்றனர். அம்மனை வணங்கிப் பின் வெளியே வலம்வர கேதாரேசுவரரும் கெளரி அம்மனும் தனிக் கோயிலில் அருள் மழை பொழிந்து கொண்டுள்ளனர்.
வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவகிரகங்கள் தனி மண்டபத்தில் அமர்ந்துள்ளனர்.
சித்திரைத் திங்களில் அம்மனுக்குப் 10 நாட்கள் விழா. அப்பொழுது அம்மன் வீதி உலா வருவதுண்டு.
ஆடி வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
சித்திரை மாதம் உத்திராடம் நட்(ற்)சத்திரத்தில் சண்டி வேள்வி(ஹோமம்) நடைபெறும்.
கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட் கிழமையும் கேதாரேசுவரருக்கும் கெளரி அம்மனுக்கும் 108 சங்கு அபிடேகம்.
தீபாவளிக்கு அடுத்தநாள் நடக்கும் கேதாரகெளரி விரத பூசையில் முடிக்கயிறு வைத்துப் பூசித்து அன்பர்களுக்குத் தருகின்றனர். இதை அணிந்து கொண்டால் தேவையற்ற அச்சம், பிணி, பில்லி சூனியம் ஆகியவைகளிலிருந்து விடுபட முடியும் என்பது மக்களின் நம்பிக்கை.
புவனேசுவரி இயந்திரம்:
Leave a Reply