அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர்
அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.
+91- 44 – 4211 3345, +91 4183 243 157, 94452 32457 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
பிரசன்ன வெங்கடேசர் |
தாயார் |
– |
|
சுந்தரவல்லி |
தல விருட்சம் |
– |
|
வில்வம் |
தீர்த்தம் |
– |
|
கிணற்று தீர்த்தம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
சுந்தரவரதராஜபுரம், சதுர்வேதிமங்கலம் |
ஊர் |
– |
|
நல்லூர் |
மாவட்டம் |
– |
|
திருவண்ணாமலை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
முன்னொருகாலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இத்தலத்தில் தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை இங்கு வைத்துப் பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, அவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் அத்தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், அங்கு கோயில் எழுப்பினர். அந்தக் கோயில் பாழடையவே, பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி அழகாக இருப்பதால் “சுந்தர வரதராஜர்” என்று அழைக்கப்படுகிறார்.
பழைய கோயிலில் இருந்த மூலவர் தனிசன்னதியில் இருக்கிறார். விழாக்கள் மற்றும் பூஜையின்போது இவருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் பிரயோக சக்கரம், வலம்புரி சங்கு மற்றும் இடதுகீழ் கையில் தண்டம் வைத்தபடி அருளுகிறார். இவரை வணங்கினால் கல்வியில் சிறந்து திகழலாம் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமியின் பீடத்தில் ஆஞ்சயேர் மண்டியிட்டு வணங்கியபடியும், மகரிஷிகள் தவம் செய்தபடியும் இருப்பது விசேஷம். மேலே கந்தர்வர்கள் உள்ளனர்.
அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை
அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
ஸ்ரீநிவாசப்பெருமாள் |
|
தீர்த்தம் |
– |
கோனேரிதீர்த்தம் |
|
பழமை |
– |
500 வருடங்களுக்கு முன் |
|
புராணப் பெயர் |
– |
திருமலை |
|
ஊர் |
– |
திருவண்ணாமலை |
|
மாவட்டம் |
– |
விருதுநகர் |
|
மாநிலம் |
– |
தமிழ்நாடு |
இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களைக் காக்கவேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம் கூறுகின்றது. மிகவும் வரப்பிரஸாதியாய்க் கருதப்படுகிறார். ஆதிசேஷனே ஒரு பர்வத வடிவமாகத் தோற்றமளிக்கிறார். அதில் பக்தர்களை காக்கும் பொருட்டு திருவேங்கடமுடயனாகத் தானே தோன்றி நிற்கிறார். சகல ஜனங்களுக்கு அவரவர் விரும்பும் பலன்களைக் கொடுத்துக் கொடுத்து எழுந்தருளி உள்ளார். அம்மலையின் அடிவாரத்தில் தாமரை முதலிய மலர்கள் நிறைந்த பம்பை என்கிற புண்ணிய தீர்த்தமும் உள்ளது. அது சகல பாவத்தையும் போக்கி சகல விருப்பத்தையும் கொடுக்க வல்ல மகிமையுடையது. அதை கோனேரி தீர்த்தம் என்றும் அழைப்பார்கள். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம். மலை மீது அமைந்துள்ள கோயிலின் அழகு தோற்றம் காண்போரை வியக்க வைக்கும் அழகுடையது. கோயிலுக்கு முன்பாக உள்ள தடாகம் அற்புதமாக உள்ளது.