அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், இராமேஸ்வரம்
அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம்.
இக்கோயிலில் இரும்பு கம்பிக்கதவு போடப்பட்டிருப்பதால் வெளியில் இருந்தே சுவாமியை தரிசிக்கலாம்.
மூலவர் | – | சுக்ரீவர் | |
தீர்த்தம் | – | சுக்ரீவர் தீர்த்தம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | இராமேஸ்வரம் | |
மாவட்டம் | – | இராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். சுக்ரீவனுக்காக இராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். சுக்ரீவன், இராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான். இவ்வாறு வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இவ்விடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். சுக்ரீவன் வழிபட்ட தலத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுக்ரீவன் சன்னதியுடன் மட்டும் அமைந்த, மிகச்சிறிய கோயில் இது. கோயிலுக்கு வெளியில் சுக்ரீவர் உண்டாக்கிய தீர்த்தமும், எதிரே வங்காள விரிகுடா கடலும் இருக்கிறது. தோஷ நிவர்த்தி தலம்.
அருள்மிகு சூரியனார் திருக்கோயில், சூரியனார்கோயில்
அருள்மிகு சூரியனார் திருக்கோயில், சூரியனார்கோயில், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435- 2472349 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவசூர்யன் | |
அம்மன் | – | உஷாதேவி, சாயாதேவி | |
தல விருட்சம் | – | வெள்ளெருக்கு | |
தீர்த்தம் | – | சூரியதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சூரியனார்கோயில் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடைய நவகிரகங்களை வேண்டி வழிபட்டார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர். இதனை அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார். “சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் தரும் அளவுக்கு மீறிச் செயல்பட்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பீடித்து உழல்வீர்களாக என சாபமிட்டார்.”
அதன்படி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர். அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி “இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும். பல்வகைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுகிரகம் செய்வீர்களாக” என அருளினார் என்பதே இத்தலத்தின் வரலாறு ஆகும்.