Monthly Archives: March 2012
உடல் உறுப்பு குறை நீங்க
உடல் உறுப்பு குறை நீங்க
உடல் உறுப்பு குறை இரண்டு வகை. ஒருவகை முற்றிலும் நீங்கும். மற்ற வகைக்கு மாற்று ஏற்பாடு செய்துகொண்டு குறையை மறந்து வாழப் பழகிக் கொள்ளுதல்.
உதாரணமாக கண்ணில் பார்வைக்கோளாறு. இதற்கு மருத்துவரிடம் சென்று கண்ணாடி அணிந்து கொள்ளலாம். ஆனால் கண் பார்வை போனவருக்கும், மாறுகண்ணுடன் பிறந்தவருக்கும் மாற்று இல்லை. இத்தகையோர் வேறு வழியின்றி இறைவனை வணங்கவேண்டிய தலங்கள்:
சத்தியமங்கலம், பண்ணாரி |
ஈரோடு |
|
பகவதி அம்மன் | மண்டைக்காடு | கன்னியாகுமரி |
வீரபத்திரர் | அனுமந்தபுரம் | காஞ்சிபுரம் |
அட்சயபுரீஸ்வரர் | விளங்குளம் | தஞ்சாவூர் |
திண்டுக்கல் |
திண்டுக்கல் |
|
நத்தம் |
திண்டுக்கல் |
|
சமயபுரம் |
திருச்சி |
|
மாங்கல்யேஸ்வரர் | இடையாற்று மங்கலம் | திருச்சி |
பிரசன்ன வெங்கடாஜலபதி | குணசீலம் | திருச்சி |
பூமிநாதர் | செவலூர் | புதுக்கோட்டை |
உடல் பலம் பெற
உடல் பலம் பெற
நல்ல மருத்துவரை அணுகவும். ஆயுர்வேதத்திலிருந்து சில குறிப்புகள்.
ஆவாரம்பூவை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
பூசணிக் காயை துருவிப் பிழிந்து பிட்டவியலாக்கி அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பலம் பெறும்.
கொத்தமல்லிக் கீரையை நெய்யில் வதக்கித் துவையல் அரைத்துத் தினசரி தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் பலம் பெறும்.
அருகம் புலலை வேருடன் பறித்து, சுத்தம் செய்து அதனுடன் சிறிது நீர் சேர்த்து அம்மியில்
வைத்து அரைத்து, அதனுடன் சம அளவு வெண்ணையையும் கலந்து காலை – மாலை என இருவேளை சாப்பிடவும். இதை போன்று நீண்ட நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பலம் ஏறும்.
பனை வெல்லத்தை அரிசித் தவிட்டுடன் கலந்து, சிறு உருண்டையாகச் செய்து இரண்டொரு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
வேப்பம் பூவை நீரில் ஊற வைத்து, காலையில் பருகி வந்தால், உடல் மெலிந்திருப்பவர்கள் உடல் மெலிவு நீங்கி பெருக்கத்தொடங்கும்.
சின்னப் பருத்திக் கொட்டையை ஊற வைத்து ஆட்டிபிழிந்து பசும் பாலுடன் காய்ச்சி பாயசம் போல் செய்து தினமும் குடித்து வர மார்பு பலம் பெரும் .
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.
பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.
சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.
தூதுவளைப் பொடியை தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.
தேவயான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.
முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும்.
உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி. இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
முதல் வாரத்தில் தூதுவளைக்கீரை, அடுத்த வாரத்தில் பசலைக்கீரை.
அதேபோல் அடுத்த வாரத்தில் தூதுவளைக் கீரை என மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கி தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
அத்துடன் கீழ்காணும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வணங்கக் குறை நீங்கும்.
பச்சோட்டு ஆவுடையார் | காங்கேயம் – மடவிளாகம் | ஈரோடு |
நட்டாற்றீஸ்வரர் | காங்கயம்பாளையம் | ஈரோடு |
சித்தேஸ்வரர் | கஞ்சமலை | சேலம் |
வாசுதேவ பெருமாள் | கடகம்பாடி | திருவாரூர் |
வண்டியூர் |
மதுரை |
|
அணைப்பட்டி |
திண்டுக்கல் |
|
சொரிமுத்து அய்யனார் | காரையார் | திருநெல்வேலி |
கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர் |
|
சுப்ரமணியர் | கிடங்கூர் | கோட்டயம் |