Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நல்லாத்தூர்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நல்லாத்தூர், கடலூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வரதராஜப்பெருமாள் |
தாயார் |
– |
|
ஸ்ரீதேவி, பூதேவி, கஜலட்சுமி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
நல்லாத்தூர் |
மாவட்டம் |
– |
|
கடலூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
“காஞ்சியில் பெரிய ஆலயம் கொண்டு, வரம் தருவதே எமது வாடிக்கை; அது தவிர வேறொன்றும் அறியேன்” என்று சொல்லி அமர்ந்தார் வரதாஜப் பெருமான். தான் வருவதற்கு முன்னரே தனது அம்ச மூர்த்தியைப் பல்வேறு தலங்களில் நிலைநிறுத்திக் கொள்ளும் எண்ணமும் அவருக்கு இருந்தது. அவற்றில் ஒன்றாக நல்லாத்தூரிலும் ஆட்சி கொண்டார். இராவணனை வீழ்த்திய பின் பாரத தேசத்தின் அனைத்து மக்களையும் காண்பதற்காக, சிறு கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை சீதாப்பிராட்டியோடு இராமர் திருவலம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தார். மக்கள் அனைவரும் இராமநாமம் சொல்லி அவரை வரவேற்றனர். “தங்களின் திருப்பாதங்களைப் பதித்து விட்டு செல்லுங்கள். அனுதினமும் அதைப் பூஜித்து ஆனந்தமடைவோம்” என அன்புடன் கேட்டுக் கொண்டனர். இராமரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றார்.
இங்குள்ள ஆதிலட்சுமி நாராயண பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அர்த்தமண்டபத்தில் திரிபங்கி இராமரும், அவருக்கு அருகே இடது கையில் இராமரின் சூரியவம்சக் கொடியை ஏந்தியும், இருக்கிறார். வலது கையால் வாய் மூடிப் பணிவாக இருக்கிறார் விநய ஆஞ்சநேயர். அருகில் திருமங்கை ஆழ்வாரும், வேதாந்த தேசிகரும் சேவை சாதிக்கின்றனர். மேலும் இங்கு பெருந்தேவி தாயாரும், கஜலட்சுமியும் அருள்பாலிக்கின்றனர். பெருமாள் சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதி உள்ளது.
அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருவதிகை
அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்.
+91-4142-243540, 94437 87186 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சரநாராயணப்பெருமாள் |
தாயார் |
– |
|
ஹேமாம்புஜவல்லித்தாயார், செங்கமலத்தாயார் |
தல விருட்சம் |
– |
|
வில்வம் |
தீர்த்தம் |
– |
|
கருட தீர்த்தம் |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
திருவதிகை |
மாவட்டம் |
– |
|
கடலூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
முன்பொரு சமயம் சிவபெருமான் திரிபுர அசுரர்களை போரிட்டு அழிக்க, தேவர்கள் தேர் ஒன்றினை படைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சூரிய, சந்திரர் தேரின் இரு சக்கரங்களாகவும், பூமி தேரின் தட்டாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும் பிரம்மன் தேர் ஓட்டுபவராகவும், விஷ்ணு அம்பாகவும் இருந்து சிவனுக்கு உதவினர் என்கிறது புராண நூல்கள். இதன் மூலம், சிவனுக்கு விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் “சரநாராயணப்பெருமாள்” என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
திருமாலின் திவ்வியத்திருத் தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.