Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், சேர்த்தலா, மருத்தோர்வட்டம்
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், சேர்த்தலா, மருத்தோர்வட்டம் – 688 012, ஆலப்புழா, கேரளா
+91 478 282 2962, 9249113355 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தன்வந்திரி பகவான் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | சேர்த்தலா, மருத்தோர்வட்டம் |
மாவட்டம் | – | ஆழப்புழா |
மாநிலம் | – | கேரளா |
நோய்குணமடைய தங்கக்குடத்தில் மருந்து வழங்குபவர் தன்வந்திரி பகவான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும் போது ஜோதி வடிவாக மஞ்சள் ஆடை தரித்து ஆபரண அலங்காரத்துடன் அமிர்தகலசத்தை கையில் ஏந்தி தோன்றியவர் இவர். ஆயுர்வேதத்தின் பிதாவாக போற்றப்படுகிறார். நான்கு கைகளை உடைய இவருக்கு, சங்கின் நாபியைப் போல மூன்று ரேகைகள் கழுத்தில் காணப்படும். தங்க ஆபரணங்கள் அணிந்து, சுருண்ட தலைமுடியுடன் இருப்பார். தசாவாதரத்துக்குப் பிறகு 11வது அவதாரமாக ஹயக்ரீவரும், 12வது அவதாரமாக தன்வந்திரியும் தோன்றினர்.
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் உதித்த மகாபுருஷர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.
தன்வந்திரி இந்து மதத்தில் வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். தன்வந்திரியை முதல் மருத்துவர் என்று நம்புகின்றார்கள் இந்துக்கள். விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தனி சந்நிதியில் தன்வந்திரி காணப்படுகிறார்.