Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு ராமர் கோயில், அயோத்தி

அருள்மிகு ராமர் கோயில், அயோத்தி– 224 124, பைசாபாத் மாவட்டம், உத்திரபிரதேச மாநிலம்.

காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ரகுநாயகன் (ராமர்)
தாயார் சீதை
தீர்த்தம் சரயு நதி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் சரயு, அயோத்தி
மாவட்டம் பைசாபாத்
மாநிலம் உத்ராஞ்சல்

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி. சரயு நதிக்கரையில் ராமனுக்கு கோயில் எழுப்பப் பட்டுள்ளது. மனித குல முதல்வரான மனு இவ்வூரை கட்டியதாகச் சொல்வர். தேவர்களே இந்நகரை கிருஷ்ணனின் ராம அவதாரத்துக்காக எழுப்பினார் எனப் புராணங்களில் சொல்லப்படுகிறது. மனுவின் வம்சத்தில் வந்த ஹரீஷ் சந்திரா, சாகர், பரகீதர் ஆகியோர் இந்த புண்ணிய பூமியை ஆண்டனர். அதன் பிறகு பகீரதரின் பேரனான தசரதர் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்னும் முன்று மனைவிகள். இவர்களில் கோசலைக்கு பிறந்தவரே இராமன். இராமாயணம் மறைமுகமாக சுட்டிக் காட்டும் உண்மை இதில்தான் புதைந்து கிடக்கிறது. தசரதர் கோசலையை மட்டும் மணந்திருந்தால், அவள் முலமாகவே, நான்கு புத்திரர்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் மூன்று பெண்களை திருமணம் செய்து, நான்கு மக்களைப் பெற்றார். ஆனால், ஆசை மனைவி கைகேயியின் சொல்லைக் கேட்டாகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, புத்திர சோகத்தால் தன் உயிரையே விட்டார். இதே போல இராவணனும் இன்னொரு பெண்ணை விரும்பியதால் இறந்தான். அயோத்தி மாநகர் ஆலயத்தில் இன்று, ஒரு குறிப்பிட்ட பகுதியில் இராமரை வழிபட எந்தத் தடையும் இல்லை. இங்கு இராமன், இரகுநாயகன் என்ற பெயரில் வீற்றிருக்கும் கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இப்போது சரயு நதிக்கரையில் அம்மாஜி மந்திர் என்ற பெயரில் புதிய தலம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு அரங்கநாதர் சன்னதியும், இராமர் சன்னதியும் உள்ளன. இராமனின் சன்னதியில் சீதாதேவியும், தம்பிகள் முவரும், அனுமனும், கருடனும் உள்ளனர். இத்தனை பேரையும் ஒருசேர வழிபடும் இடம் இதுவே.

அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்

அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்-683 572 எர்ணாகுளம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 484 – 247 3996 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லெட்சுமணப்பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன்,ஸுக்திநாதன்)
தாயார் மதுரவேணி நாச்சியார்
தீர்த்தம் சங்க தீர்த்தம், சிற்றாறு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமூழிக்களம்
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளா

வாக்கேல் கைமல் என்ற முனிவர் ஆற்றில் நீராடியபோது, இராமர், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன் ஆகியோரது விக்கிரகங்கள் கிடைத்தது. அன்றிரவு இவரது கனவில் தோன்றிய பகவான், இந்த விக்கிரகங்களை பாரதப்புழா ஆற்றின் கரையோர தலங்களில் பிரதிஷ்டை செய்யக் கூறினார். இத்தலங்கள் தான் திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் இராமர் கோயிலாகவும், இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோயிலாகவும், பாயமல்லில் சத்ருக்கன் கோயிலாகவும், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களத்தில் லெட்சுமணப்பெருமாள் கோயிலாகவும் அமைந்துள்ளது.