Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில், திருச்சென்னம்பூண்டி
அருள்மிகு சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில், திருச்சென்னம்பூண்டி, (கோயிலடி அருகில்) திருவாரூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
திருக்கடையுடைய மகாதேவர் |
அம்மன் |
– |
|
சித்தாம்பிகா |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
திருச்சென்னம்பூண்டி |
மாவட்டம் |
– |
|
திருவாரூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
சிவலிங்க வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் அழைக்கப்படுகிறார் என தலவரலாறு கூறுகிறது. திருக்கடைமுடி மகாதேவர் கோயில் என முன்பு அழைக்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது சடையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் மாதிரியான ஆலயம் இது எனச் சொல்லப்படுகிறது.
இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் திருக்கடையுடைய மகாதேவர். அம்மனின் பெயர் சித்தாம்பிகா. இவளது சன்னதி தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. அம்மன் தனது மேல் வலது கரத்தில் சங்கு, மேல் இடது கரத்தில் கதை தாங்கி அருள்புரிகிறாள். முன்னிரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கிறாள். இறைவனின் சன்னதி கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியின் முன் நந்தி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இங்கு 21 கல்வெட்டுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இக்கோயிலுக்கு பொன் அளித்தோர் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது. இறைவன் சன்னதி முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு அபிஷ்ட வரதராஜர் பெருமாள் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி
அருள்மிகு அபிஷ்ட வரதராஜர் பெருமாள் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.
+91 – 4369 – 224 099 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
அபிஷ்ட வரதராஜர் |
உற்சவர் |
– |
|
சீனிவாசன், பத்மாவதி |
தாயார் |
– |
|
பூதேவி, நீளாதேவி |
தல விருட்சம் |
– |
|
வில்வம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
திருத்தருப்பூண்டி |
ஊர் |
– |
|
திருத்துறைப்பூண்டி |
மாவட்டம் |
– |
|
திருவாரூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
திருத்துறைப்பூண்டி என்ற தலம் ஒரு காலத்தில் திருத்தருப்பூண்டி என அழைக்கப்பட்டது. வில்வமரங்கள் சூழ்ந்த காடாக அமைந்தது இத்தலம். இங்கு, திருமால் குடி கொண்டுள்ளார். அவரது திருநாமம் அபிஷ்ட வரதராஜப் பெருமாள். வரதராஜப்பெருமாள் கோயில் என்பதை விட, அவரது தாசனாய் இங்கு கொலு வீற்றிருக்கும் 16 அடி உயர ஆஞ்சநேயர்தான் பிரபலமாகி விட்டார். அனுமான் கோயில் என்றால் எல்லாருக்கும் பரிச்சயமாக உள்ளது. “அபிஷ்டம்” என்ற சொல்லுக்கு “கோரிக்கை” என்று பொருள். இப்பெருமாளிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். இப்பகுதியை ஆண்ட வீரசோழன் என்ற மன்னன், எதிரிநாட்டினர் தந்த துன்பம் கருதி, அவர்களை போரிட்டு வெல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தான். பெருமாளின் நல்லாசியால் வெற்றி பெற்றான். நியாயமான கோரிக்கை வைத்தால், இவர் நிறைவேற்றித் தருவது உறுதி என்ற கருத்தில் “அபிஷ்ட வரதராஜப் பெருமாள்” என்ற பெயர் ஏற்பட்டது. இவரது தொண்டராக விளங்கும் ஆஞ்சநேயரை “வைராக்கிய ஆஞ்சநேயர்” என்கின்றனர்.
ஆஞ்சநேயர் போன்ற தெய்வத்தை உலகத்தில் காண்பதரிது. “அஞ்சனை மைந்தா போற்றி” எனப் பாடினால் கூட முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ளும் அவர், “ஸ்ரீராம ஜெயம்” என யாரோ ஒருவனைப் பற்றிச் சொன்னால் முகம் மலர்ந்து அங்கே வந்து உட்கார்ந்து விடுகிறார். இராமனை யாரென்று அவருக்கு தெரியவே தெரியாது. காட்டில் அவரைப் பார்க்கிறார். அவரது முகத்திலுள்ள கலவரத்தை உணர்ந்து கொள்கிறார். மனைவியை இழந்து தவிக்கும் அவரது கதையைக் கேட்கிறார். தன் எஜமானன் சுக்ரீவனிடம் போய் சொல்லி, அவரை அழைத்துச் செல்கிறார். இராமனே கதியென அவருக்காக வேலை செய்கிறார். அவருக்காக சண்டை போடுகிறார். இறுதியாக, அவருக்கு வைகுண்டபதவி தரப்படுவதை மறுக்கிறார். பூலோகத்தில் சிரஞ்சீவியாக இராமநாமம் கேட்டுக்கொண்டே காலம் தள்ளுவதாகச் சொல்லி, இன்றுவரை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த ஆஞ்சநேயருக்கு உலகில் பல இடங்களிலும் உயரமான சிலைகள் எழுப்பப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் உள்ள அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயிலில், அவர் விஸ்வ ரூபியாய், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.