Category Archives: திருநெல்வேலி

பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) திருக்கோயில், மலையான்குளம்

அருள்மிகு பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) திருக்கோயில், மலையான்குளம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 254 721, 93603 12580

இக்கோயில் புதன், சனிக்கிழமையில் மட்டும் காலை 10 – மதியம் 2 மணிவரையிலும், மற்ற நாட்களில் காலை 8 – 10 மணி வரையில் மட்டும் திறந்திருக்கும். பிற நேரங்களில் சுவாமியை தரிசிக்கச் செல்வோர், அர்ச்சகரை முன்கூட்டியே போனில் தொடர்பு கொண்டுவிட்டு செல்வது நல்லது.

மூலவர் பாடகலிங்கம், மகாலிங்கம்
அம்மன் பாடகலிங்கநாச்சியார்
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பாடகலிங்க தெப்பம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மலையான்குளம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட கேரள மன்னர் ஒருவரின் மனைவி, தனியே வனத்தைச் சுற்றிப்பார்க்க சென்றார். நீண்ட தூரம் வந்த அவளுக்குத் தாகம் உண்டாது. அருகில் ஒரு பள்ளத்தில் சுனை இருந்ததைக் கண்டு, அதில் நீர் பருகுவதற்காக இறங்கினாள். அப்போது தான் அணிந்திருந்த பாடகத்தை (காலில் அணியும் தண்டைஎன்னும் ஆபரணம்) கரையில் கழற்றி வைத்துவிட்டுச் சென்றாள். சுனையில் நீர் பருகிய அவள், மீண்டும் கரையேற முடியவில்லை. பயத்தில் அவள் கூச்சலிடவே, அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சென்று பார்த்தனர். மன்னரின் மனைவி சுனைக்குள் இருந்ததைக் கண்ட அவர்கள், மன்னருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இங்கு வந்து மனைவியை மீட்டார். அவள் சுனையின் கரையில் வைத்த பாடகங்கள் இரண்டும், சற்று தூரத்தில் ஒரு மூங்கில் கன்றில் சிக்கியிருந்தது. அதை எடுப்பதற்காக மன்னன் ஒரு கோடரியால் மூங்கிலை வெட்டினாள். அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. பயந்த மன்னரும், மனைவியும் அரண்மனைக்கு திரும்பிவிட்டனர். மறுநாள் அரசவை குருவை அழைத்துக்கொண்டு மன்னர் அங்கு சென்றார்.

நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில், செப்பறை

அருள்மிகு நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில், செப்பறை, திருநெல்வேலி மாவட்டம்.

+91-4622-339 910

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நெல்லையப்பர்
அம்மன் காந்திமதி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் செப்பறை
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் இராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அன்று முழுவதும் இராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, “இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகிலுள்ள குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் இலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடுஎனக் கூறி மறைந்தார். அதன்படியே, சிற்பி ஒருவர் நடராஜரின் விக்ரகம் ஒன்றை சுமந்து வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை கனத்தது. அதற்குமேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. சிலையை அவர் செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையைக் காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். இராமபாண்டியன் அதிர்ச்சி யடைந்து சிலையை தேடிச்சென்றார். வேணுவனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன. இராமபாண்டியன் மகிழ்வடைந்து இலிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் தனி சன்னதி அமைத்தார். அவர் கட்டிய கோயில் வெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன்பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோயிலைக் கட்டினார்.