Category Archives: கேரளா

அருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில், லோகனார்காவு

அருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில், லோகனார்காவு– 673 104, சித்தசமாஜம் போஸ்ட், வடகரா தாலுக்கா, கோழிக்கோடு மாவட்டம் கேரளா மாநிலம்.
*************************************************************************************************

+91 496-252 7444.94472 34320, 94475 40933, 99468 90968 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – லோகாம்பிகா அம்மன்

தீர்த்தம்: – பெரிய குளம், சிறிய குளம்

ஆகமம்/பூசை : – அத்யுத்தமா என்ற முறையில் பூசை செய்யப்படுகிறது.

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – லோகனார்காவு

மாவட்டம்: – கோழிக்கோடு

மாநிலம்: – கேரளா

இங்கு பகவதி,சிவன், திருமாலுக்கென்று மூன்று கோயில்கள் உள்ளன. பகவதியை லோகாம்பிகை, ஆதிபராசக்தி என அழைக்கின்றனர். இவள் சுயம்பு மூர்த்தியாக(தானாகத் தோன்றியவள்) காட்சி தருவது சிறப்பாகும். வடஇந்தியாவில் இருந்து நகரிகர் என்னும் ஆரியர்கள் இடம்பெயர்ந்து கேரளத்திலுள்ள புதுப்பனம் கிராமத்திற்கு வியாபாரத்திற்காக வந்தனர். அவர்களுடன் குலதெய்வமான லோகாம்பிகை உடன் வந்தாள். நகரிகர்களின் கண்ணுக்கு மட்டுமே அவள் தெரிவாள். நகரிகர்களில் ஒருவரை, உள்ளூர்வாசிகள் சிலர் ஒழுக்கக் குறைவானவர் என்று பழித்தனர். பழிச் சொல்லைத் தாங்காமல், அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதற்கு பின், நகரிகர்கள் ஓலம்பலம் என்னும் கிராமத்திற்கு வந்து அதன்பின் லோகனார்காவு கிராமத்திற்குக் கூட்டமாகச் சென்றனர். கூட்டத்தின் பின்னால் தேவியும் பின்தொடர்ந்தாள். அந்த கிராம மக்கள் கண்ணுக்கு லோகாம்பிகா தெய்வம் தெரிந்தது. அவள் யார் என நகரிகர்களிடம் கேட்டனர். நகரிகர்கள் ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தபோது, அவர்களது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டாள்.

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு – 629 252, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91 – 4651 – 222 596

காலை 5 மணி முதல் 10மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பகவதி அம்மன்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: – மந்தைக்காடு

ஊர்: – மண்டைக்காடு

மாவட்டம்: – கன்னியாகுமரி

மாநிலம்: – தமிழ்நாடு

காஞ்சி சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீசக்கரம் வைத்து பூஜை செய்கின்றார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீசக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.

அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது.