Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு நாகராஜர் திருக்கோயில், மாளா, பாம்புமேக்காடு மனை

அருள்மிகு நாகராஜர் திருக்கோயில், மாளா, பாம்புமேக்காடு மனை, திருச்சூர் மாவட்டம், கேரளா.

+91 – 480 – 289 0453, 289 0473 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலையில் மட்டும் திறந்திருக்கும்.

மூலவர் நாகராஜா
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் மாளா, பாம்புமேக்காடு மனை
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா

இரிஞ்ஞாலக் குடா அருகிலுள்ள மேக்காட்டில் வசித்த நம்பூதிரி ஒருவர் சிறந்த பக்திமான்; ஆனால் ஏழை. தன்குடும்ப வறுமை தீர அருகிலுள்ள திருவற்றிக்குளம் சிவன் கோயிலில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து பஜனைப் பாடல்கள் பாடி வந்தார். சிவனிடம் தன் குடும்ப வறுமை நீங்க, உருக்கமாக பிரார்த்தித்தார். ஒரு முறை, அவர் தண்ணீர் எடுக்க அருகிலுள்ள குளத்துக்குச் சென்றார். அப்போது அங்கே பிரகாசம் எழுந்தது. சகல ஐஸ்வர்யங்களும் மிக்க ஒரு உருவம் அங்கு வந்தது. அதன் கையில் மாணிக்கக்கல் இருந்தது. நம்பூதிரி அந்த உருவத்திடம், “நீங்கள் யார்? இவ்வளவு பிரகாசமாக இருக்கிறீர்களே. உங்கள் கையில் ஏதோ மின்னுகிறேதேஎன வரிசையாய் கேள்விகளை அடுக்கினார். இந்த உருவம் சற்று கோபத்துடன், “என்னைப் பற்றிய விசாரணை உனக்கு தேவையில்லாதது. தண்ணீர் எடுக்கத்தானே வந்தாய். எடுத்துக் கொண்டு போய்விடுஎன்றது. இருப்பினும் நம்பூதிரி விடவில்லை. “சரி. உங்களைப் பற்றி எதுவும் செல்ல வேண்டாம். உங்கள் கையிலுள்ள கல் பளிச்சிடுகிறதே அதை எனக்கு தருவீர்களா?” என்றார்.

அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில், சின்னமனூர்

அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.

+91- 4554-249 480 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாணிக்கவாசகர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சின்னமனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் வசித்த சம்புபாதசிரியர், சிவஞானவதி தம்பதியரின் மகன் வாதவூரார். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக்கி, “தென்னவன் பிரமராயன்என்று பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து தனது படைக்கு குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான்.

அவர் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) தலத்தை அடைந்தபோது, ஒரு குருந்த மரத்தின் அடியில் சிவபெருமான், குருவாக இருந்து சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக்கண்ட வாதவூரார் தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, திருவடியில் விழுந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

சிவனும் அவருக்கு உபதேசம் செய்தார். மகிழ்ந்த மாணிக்கவாசகர் அவரைப் பற்றி பாடினார். அந்த பதிகங்களின் வாசகங்கள் மாணிக்கம் போல இருந்ததால் சிவன் அவருக்கு மாணிக்கவாசகர்என பெயர் சூட்டினார். தன்னை சிவனிடமே ஒப்படைத்த மாணிக்கவாசகர், மன்னன் அழைப்பை ஏற்று நாடு திரும்பினார். அவருக்காக சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும் அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரைத் தண்டித்தான் மன்னன். சிவன், அவரை விடுவிக்கத் திருவிளையாடல் செய்து, தனது பக்தனின் பெருமையை ஊரறியச் செய்தார். இப்படி புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இங்கு மூலவராக அருளுகிறார்.