Category Archives: திருமால் ஆலயங்கள்
அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், கடையநல்லூர்
அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.
+91- 99657 61050 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
நீலமணிநாதர் (கரியமாணிக்கபெருமாள்) |
தாயார் |
– |
|
மகாலட்சுமி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
அர்ஜுனபுரி க்ஷேத்ரம் |
ஊர் |
– |
|
கடையநல்லூர் |
மாவட்டம் |
– |
|
திருநெல்வேலி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
குருக்ஷேத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பொதிகை மலைக்கு சென்று, தாமிரபரணியில் நீராடி பாவம் போக்கிவிட்டு, படைகளுடன் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் இத்தலம் அருகே வந்தபோது, ஒரு மருத மரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது, மகாவிஷ்ணு அவனது கனவில் தோன்றி, “தான் மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் இருக்கும் தன்னை வணங்கினால், பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும்” என்றார். விழித் தெழுந்த அர்ஜுனன், மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு சென்றபோது, பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அவரை வழிபட்ட அர்ஜுனன், அந்த சுயம்பு மூர்த்திகளை (தானாகத் தோன்றியவை) பிரதிஷ்டை பூஜை செய்து வணங்கினார். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.
கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு “கறிவேப்பிலை சாதம்” திருவோண நட்சத்திர தினத்தில் “பாயாசம்” நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, “அர்ஜுனபுரி க்ஷேத்திரம்” என்ற பெயரும் உண்டு.
அருள்மிகு இலட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம்
அருள்மிகு இலட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
+91- 94420 64803 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
லட்சுமிநாராயணர் |
|
உற்சவர் |
– |
சீனிவாசர் |
|
தல விருட்சம் |
– |
வில்வம் |
|
தீர்த்தம் |
– |
கிணறு தீர்த்தம் |
|
பழமை |
– |
500 வருடங்களுக்கு முன் |
|
ஆகமம் |
– |
வைகானசம் |
|
ஊர் |
– |
அம்பாசமுத்திரம் |
|
மாவட்டம் |
– |
திருநெல்வேலி |
|
மாநிலம் |
– |
தமிழ்நாடு |
முற்காலத்தில் இக்கோயிலில் சிவன், இலிங்கரூபமாக எழுந்தருளியிருந்தார். ஒரு சமயம் பொதிகை மலைக்கு அகத்தியரை சந்திக்கச் சென்ற சனகாதி முனிவர்கள், இங்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் சிவன், திருமால் இருவரும் ஒன்றா? என்ற சந்தேகம் வந்தது. தங்கள் குழப்பத்தை தீர்க்கும்படி சிவனிடம் முறையிட்டனர். உடன் இங்கிருந்த இலிங்கத்தில் பெருமாள், மகாலட்சுமியுடன் காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு, இலட்சுமி நாராயணர் சிலை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பப்பட்டது.
மூலஸ்தானத்தில் பெருமாள், மடியில் மகாலட்சுமியை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள், புதன் கிரகத்திற்கும், தாயார் சுக்ரனுக்கும் அதிபதி ஆவர். எனவே இத்தலம், “புதசுக்ர பரிகார க்ஷேத்ரம்” என்றும் அழைக்கப்படுகிறது. புதன் கிரக தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், சுக்ரதோஷம் உள்ளவர்கள் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு புதன்கிழமைகளில், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள பெண்கள் சுவாமி முன்பு பச்சரியின் மீது தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.