Category Archives: வகையிடப்படாதவை
அருள்மிகு பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை
அருள்மிகு பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், வடக்குமாட வீதி, திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம்.
+91 96778 56602 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
பூதநாராயணப்பெருமாள் |
உற்சவர் |
– |
|
தாயார்களுடன் நாராயணர் |
ஆகமம் |
– |
|
வைகானசம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
வடக்குமாட வீதி, திருவண்ணாமலை |
மாவட்டம் |
– |
|
திருவண்ணாமலை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
கிருஷ்ண பரமாத்வால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், அவரை அழிக்கப் பல யுக்திகளைக் மேற்கொண்டான். ஆனால், அவனால் கிருஷ்ணரை நெருங்கக்கூட முடியவில்லை. ஒருகட்டத்தில் பூதனை என்ற அரக்கியை தந்திரமாக அனுப்பி வைத்தான். அவள் ஒரு அழகியாக உருவெடுத்து, கிருஷ்ணரிடம் சென்றாள். அவரைத் தூக்கிக் கொண்டு கொஞ்சினாள். வந்திருப்பது அரக்கி என்று தெரிந்தும், ஒன்றும் தெரியாதவர் போல கிருஷ்ணர் நடித்தார். பூதனை அவரை தன் மடியில் வைத்துக் கொண்டு, பாசமுடன் தாய் போல நடித்து பால் கொடுத்தாள். கிருஷ்ணரும் பால் அருந்துவது போல நடித்து, அவளை வதம் செய்தார். இதனால், கிருஷ்ணருக்கு பூதநாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வடிவத்தில் சுவாமிக்கு இங்கு ஒரு மன்னர் கோயில் எழுப்பினார். பிற்காலத்தில் வழிபாடு மறைந்து, கோயிலும் மறைந்து போனது.
பல்லாண்டுகளுக்கு பின், இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சுவாமி, தான் மண்ணிற்கு அடியில் புதைந்திருப்பதை உணர்த்தினார். அதன்படி, இங்கு சுவாமி சிலையைக் கண்ட பக்தர், அவர் இருந்த இடத்தில் கோயில் எழுப்பினார்.
மகாவிஷ்ணு பூதநாராயணர் என்ற பெயரில் தேனி அருகிலுள்ள சுருளிமலையிலும், இங்கும் அருள்பாலிக்கிறார். இங்கு சுவாமி, கிருஷ்ணராக பால பருவத்தில் இருந்தாலும், பூதனையிடம் பால் அருந்தியதால் பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடித்து, வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்துள்ளார். தினமும் காலையில் இவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. குணமுள்ள குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.
அருள்மிகு உத்தமராயப்பெருமாள் திருக்கோயில், பெரிய அய்யம்பாளையம்
அருள்மிகு உத்தமராயப்பெருமாள் திருக்கோயில், பெரிய அய்யம்பாளையம், ஆரணி தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம்.
+91 4181-248 224, 248 424, 93455 24079
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 7.30 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டிய போனில் தொடர்பு கொண்டால், மற்ற வேளைகளில் சுவாமியைத் தரிசிக்கலாம்.
மூலவர் |
– |
|
உத்தமராயப்பெருமாள் |
உற்சவர் |
– |
|
ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்தமராயப் பெருமாள் |
ஆகமம் |
– |
|
வைகானசம் |
தீர்த்தம் |
– |
|
பெருமாள்குளம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
பெரிய அய்யம்பாளையம் |
மாவட்டம் |
– |
|
திருவண்ணாமலை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன், இங்கிருந்த மலையில் சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு பெரியவர் அங்கு வந்தார். சிறுவன் முன் சென்று நின்றார். அந்த கிராமத்தில் அதுவரையில் தான் பார்த்திராத அந்த பெரியவரைக் கண்ட சிறுவனுக்கு ஆச்சரியம். சிறுவனின் தலை மீது கை வைத்த பெரியவர், “ஊருக்குள் போய் நான் வந்திருக்கிறேன் எனச் சொல்” என்றார். மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல சிறுவன், குன்றிலிருந்து இறங்கி ஊருக்குள் சென்றான். அங்கிருந்தவர்களை அழைத்து, “நம்ம ஊரு மலைக்கு ஒரு பெரியவர் வந்திருக்காரு” என்றான். வாய் பேசாத ஊமைச்சிறுவன் பேசியதைக் கேட்டவர்களுக்கு, ஆச்சர்யம் தாங்கவில்லை. அவனிடம் பேசும் தன்மை வந்தது குறித்து கேட்டபோது, மலைக்கு வந்த பெரியவர் தன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்ததைக் கூறினான். வியந்த மக்கள், குன்றுக்கு வந்தனர். அங்கு, பெருமாள் தானே பெரியவராக வந்ததை உணர்த்தி சங்கு, சக்கரத்துடன் காட்சி தந்தார். மகிழ்ந்த மக்கள் அவருக்கு கோயில் எழுப்பினர். ஊமைச் சிறுவனுக்கு பேசும் தன்மையைக் கொடுத்ததால் இவர் “ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள்” என்று பெயர் பெற்றார். விஜயநகர பேரரசு மன்னர்கள் இக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர்.
இத்தல பெருமாள் சிறுவனுக்கு காட்சி கொடுத்தவர் என்பதால், உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு. இவர் சங்கு, சக்கரம் ஏந்தி, ஆவுடையார் மீது நின்றிருக்கிறார். சுவாமி தனியே வந்து தங்கியவர் என்பதால், தாயாருக்கு சன்னதி கிடையாது. சனிக்கிழமைதோறும் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மனதில் இருக்கும் தீய சிந்தனைகள் விலகவும், திருமணமாகாதோர் உத்தமமான வரன் அமையவும் இங்கு வழிபடுகிறார்கள்.