Category Archives: பாடல் பெற்றவை
அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர்
அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 435 200 0157, 96558 64958 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | எழுத்தறிநாதர்(அட்சரபுரீஸ்வரர்) | |
அம்மன் | – | நித்தியகல்யாணி, சுகந்த குந்தளாம்பாள் | |
தல விருட்சம் | – | செண்பகமரம் | |
தீர்த்தம் | – | ஐராவத தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருஇன்னம்பூர், திருவின்னம்பர் | |
ஊர் | – | இன்னம்பூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டான். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே,”ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?” என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு “எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்” என்ற திருநாமம் ஏற்பட்டது. “அட்சரம்” என்றால் “எழுத்து.” இது சுயம்புலிங்கம் என்பதால் “தான்தோன்றீயீசர்” என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் “கொந்தார் குழலம்மை” என்னும் சுகந்த குந்தளாம்பாளுக்கு தனி சந்நிதியும், நித்திய கல்யாணி அம்மனுக்குத் தனி சந்நிதியும் ஆக இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.
அருள்மிகு கோடீஸ்வரர் (கைலாசநாதர்) திருக்கோயில், கொட்டையூர்
அருள்மிகு கோடீஸ்வரர் (கைலாசநாதர்) திருக்கோயில், கொட்டையூர், தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம்.
+91 435 245 4421 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கோடீஸ்வரர், கைலாசநாதர் | |
அம்மன் | – | பந்தாடு நாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | அமுதக்கிணறு | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கொட்டையூர், கோடீச்சரம், பாபுராஜபுரம் | |
ஊர் | – | கொட்டையூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
திரிகர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி. இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். இவனது உருவைக்கண்டு ஊரே நடுங்கி ஓடியது. தன்னைக் கண்டாலே ஓடும் மக்களை தன்வசம் மீண்டும் இழுக்க அவன் சிவபெருமானை வணங்கினான். அவரது அருளாசியின்படி கொட்டையூர் என்ற தலத்திற்கு சென்று வணங்கும்படி கூறினார். அவனும் கொட்டையூருக்கு வந்து இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கினான். இந்த தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இந்தக் கிணற்று நீரில் நீராடி முன்பைவிட வனப்பான உருவம் பெற்றான். இப்போதும் இந்தக்கிணறு இங்கு உள்ளது. பல பெண்கள் இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம் என நம்புகிறார்கள். கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம்.
ஆமணக்கு கொட்டைச்செடியின்கீழ் இலிங்கம் வெளிப்பட்டதால் ஊர் “கொட்டையூர்” என்று பெயர் பெற்றது. பத்திரியோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தன்னுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் “கோடீஸ்வரர்” எனப்பட்டார்.