Category Archives: பாடல் பெற்றவை
பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம், சிதம்பரம் நகர்
அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம், சிதம்பரம் நகர், கடலூர் மாவட்டம்.
+91- 98420 08291, +91-98433 88552
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பாசுபதேஸ்வரர் | |
அம்மன் | – | சத்குணாம்பாள், நல்லநாயகி | |
தல விருட்சம் | – | மூங்கில் | |
தீர்த்தம் | – | கிருபா தீர்த்தம் | |
ஆகமம் | – | காமிய ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவேட்களம் | |
ஊர் | – | திருவேட்களம் (சிதம்பரம் நகர்) | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் |
பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன்,”நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீகத் தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்துதான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும்” என்றார்.
இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க, துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம்,”உமையவளே. நீ லோகமாதா. நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது” என சமாதானப்படுத்தி “சற்குணா” (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார். சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் இலிங்கத்தின் மீது காணலாம்.
தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்
அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
+91- 94439 86996
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலக் கூத்தன்) | |
உற்சவர் | – | ||
அம்மன் | – | உமையாம்பிகை (சிவகாமசுந்தரி) | |
தல விருட்சம் | – | தில்லைமரம் | |
தீர்த்தம் | – | சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கோயில் | |
ஊர் | – | சிதம்பரம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லைவனக் காட்டில் உள்ள சுயம்பு இலிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார். இதையடுத்து, மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள இலிங்கத்தைத் தினமும் பூஜை செய்தார்.