சுகப்பிரசவம் நடக்க

சுகப்பிரசவம் நடக்க

சுமார் 35 வயது நிரம்பிய பலரை விசாரித்தால் அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும், அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாகவும் இருப்பார்கள். வீட்டிலேயே
பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்குத் துணையாக இருந்தவர்கள் அவர்களின் அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே. கிராமங்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே பிரசவம் செய்கிறார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தி படாமல் நடந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது.
படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்,
வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?

உலகெங்கும் உள்ள பல கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது
மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள்தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும்? என்ற கேள்வி எழும். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள டாக்டர்கள், “கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது. சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து. என்ன சொல்கிறீர்கள்?” என்று பயமுறுத்தும்போது சரி என்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. டாக்டர்களும் உடன் வந்தவர்களிடம் கையெழுத்தையும் பணத்தையும் வாங்கி கொண்டு சட்டப் பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். நாம் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்ட காரணத்தால் பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது.

இடுப்பு எலும்பு யாருக்குப் பிறவியிலேயே மிகக் குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் சிசேரியன் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் உண்டு.

நன்கு பழகிய மருத்துவர் நடத்தும் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுங்கள். இயன்றவரை வயிற்றைக் கிழிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அறுவை சிகிச்சைதான் வழி என்றால், வேறு வழியில்லை. கீழ்கண்ட ஆலயங்களில் உள்ள இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டு ஆவன செய்யுங்கள்.

காத்தாயி அம்மன்

காட்டுமன்னார் கோவில்

கடலூர்

உடையீஸ்வரர் இளநகர் காஞ்சிபுரம்
சசிவர்ணேஸ்வரர் சிவகங்கை சிவகங்கை
முல்லைவனநாதர் திருக்கருகாவூர் தஞ்சாவூர்
பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்) நல்லூர் தஞ்சாவூர்

முத்துமாரியம்மன்

மணலூர்

தஞ்சாவூர்

தாயுமானவர் திருச்சி திருச்சி
தான்தோன்றீஸ்வரர் உறையூர் திருச்சி
வன்னியப்பர் ஆழ்வார்குறிச்சி திருநெல்வேலி
இராமநாதர் திருக்கண்ணபுரம் திருவாரூர்
அக்னிபுரீஸ்வரர் திருப்புகலூர் திருவாரூர்
வைத்தியநாதசுவாமி (சிவகாமி அம்பாள்) மடவார்வளாகம் விருதுநகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *